/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரீத்தி மருத்துவமனை சார்பில் எலும்பு முறிவு கருத்தரங்கு
/
பிரீத்தி மருத்துவமனை சார்பில் எலும்பு முறிவு கருத்தரங்கு
பிரீத்தி மருத்துவமனை சார்பில் எலும்பு முறிவு கருத்தரங்கு
பிரீத்தி மருத்துவமனை சார்பில் எலும்பு முறிவு கருத்தரங்கு
ADDED : ஆக 03, 2025 04:36 AM

மதுரை : மதுரை கோர்ட் யார்டு மேரியட் ஓட்டலில் பிரீத்தி மருத்துவமனை சார்பில் எலும்பு முறிவு, இடப் பெயர்ச்சி சிக்கல்களை பகுத்தறிவது குறித்து மூன்று நாள் கருத்தரங்கு ஆக.,1ல் துவங்கியது. டாக்டர் தன்னா துவக்கி வைத்தார்.
பணியிடங்களில் நடக்கும் விபத்துகளில் எலும்பு முறிவு, இடம்பெயர்தல் பிரச்னைகளே அதிகம் நடக்கின்றன. அவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காயங்களின் சிக்கல்கள், சிகிச்சை உத்திகள், புதுமையான அறுவை சிகிச்சை அணுகுமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
தோள்பட்டை முதல் கால் வரையுள்ள மூட்டுப் பிரச்னைகள் குறித்து முன்னணி மருத்துவ நிபுணர்கள் விளக்குகின்றனர். ஆர்த்தோபடிக்ஸ் துறையில் '3டி பிரின்டிங்', குழந்தை டிராமா ஆகியவை தொடர்பான சிறப்பு அமர்வுகள் நடக்கின்றன.
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்கள் சிவக்குமார், ஹேமா, டாக்டர்கள் சிதம்பரம், பிரஹலாத் குமார் சிங்கி, வினோத், பரத்குமார், செந்தில்குமார் உட்பட 370க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஆர்த்தோபடிக்ஸ் மற்றும் டிராமடாலஜி பிரிவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.