/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தங்கக்காசு தருவதாக கூறி டாக்டரிடம் ரூ.14.25 லட்சம் மோசடி
/
தங்கக்காசு தருவதாக கூறி டாக்டரிடம் ரூ.14.25 லட்சம் மோசடி
தங்கக்காசு தருவதாக கூறி டாக்டரிடம் ரூ.14.25 லட்சம் மோசடி
தங்கக்காசு தருவதாக கூறி டாக்டரிடம் ரூ.14.25 லட்சம் மோசடி
ADDED : ஜன 24, 2024 06:14 AM
மதுரை : மதுரையில் குறைந்த விலையில் தங்கக்காசு தருவதாக கூறி அரசு டாக்டர் தர்மராஜூவிடம் ரூ.14.25 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை புதுார் டாக்டர் தர்மராஜ் 59. அரசு மருத்துவக்கல்லுாரி பேராசிரியர். இவரது நண்பர் சண்முகம். ஓய்வுபெற்ற எல்.ஐ.சி., ஊழியர். எல்.ஐ.சி., பாலிசி எடுத்த வகையில் இருவரும் நண்பர்களாயினர். 2019 ஜனவரியில் தர்மராஜிடம் சண்முகம், ''நான் ரைட் ஜூவல்லர்ஸ் என்ற தனியார் நிறுவன இயக்குநராக உள்ளேன். முன்பணம் செலுத்தினால் குறைந்த விலையில் தங்கக்காசு கிடைக்கும்,'' என ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பி மொத்தம் ரூ.14.25 லட்சம் தர்மராஜ் கொடுத்தார். இதுவரை தங்கக்காசுகள் கொடுக்காத நிலையில் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. ஓராண்டுக்கு முன் போலீசில் தர்மராஜ் புகார் செய்தார். ஆறு மாதத்திற்குள் பணத்தை திருப்பித் தருவதாக சண்முகம் கூறிய நிலையில் பணத்தை தரவில்லை. அவர் மீது தல்லாகுளம் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

