/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வங்கிக் கணக்கை 'அப்டேட்' செய்ய மெசேஜ் அனுப்பி திருட்டு: ஏ.பி.கே., என முடியும் பைலில் வாட்ஸ்ஆப் வந்தால் ஜாக்கிரதை
/
வங்கிக் கணக்கை 'அப்டேட்' செய்ய மெசேஜ் அனுப்பி திருட்டு: ஏ.பி.கே., என முடியும் பைலில் வாட்ஸ்ஆப் வந்தால் ஜாக்கிரதை
வங்கிக் கணக்கை 'அப்டேட்' செய்ய மெசேஜ் அனுப்பி திருட்டு: ஏ.பி.கே., என முடியும் பைலில் வாட்ஸ்ஆப் வந்தால் ஜாக்கிரதை
வங்கிக் கணக்கை 'அப்டேட்' செய்ய மெசேஜ் அனுப்பி திருட்டு: ஏ.பி.கே., என முடியும் பைலில் வாட்ஸ்ஆப் வந்தால் ஜாக்கிரதை
ADDED : டிச 24, 2024 05:00 AM

நாளுக்குநாள் சைபர் கிரைம்கள் புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகின்றன. ஏ.டி.எம்.,மில் மற்றவர்களுக்கு உதவுவதுபோல் திருடுவது, 'நான் பாங்க் மேனேஜர் பேசிறேன்' என கொச்சை தமிழில் பேசுவது, உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என போலி 'லிங்க்' அனுப்புவது என சொல்லிக்கொண்டே போகலாம்.
பயந்தோ, கொஞ்சம் சபலப்பட்டோ அவர்கள்அனுப்பும் 'லிங்கை' தொட்டு, அவர்கள் வழிகாட்டுதல்படி நடந்தால் அடுத்த நொடி நமது அத்தனை சேமிப்பும் ஒரே 'கிளிக்'கில் கரைந்துவிடும்.
இந்த மோசடியை உணர்வதற்குள் அந்த மோசடி நபர் தனது வங்கிக்கணக்கையும் காலி செய்துவிட்டு அடுத்தவரை மோசடி செய்ய தயாராகி விடுவார். சமீபகாலமாக சில தனியார் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் அலைபேசிக்கு 'கே ஒய் சி'யை (நோ யுவர் கஸ்டமர்) அப்டேட் செய்யுங்கள் என்று லிங்க் அனுப்பப்படுகிறது.
அந்த வாடிக்கையாளர் வங்கி கணக்குடன் ஆதார், போட்டோ உட்பட விவரங்களை அப்டேட் செய்வதற்காக கேட்கப்படுகிறது. அதையே மோசடி பேர்வழிகளும் வங்கியின் லோகோவை போலியாக பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
வங்கியில் இருந்து அனுப்புவது போலவே அதன் முத்திரையுடன் 'லிங்க்'கை உருவாக்கி வாட்ஸ் ஆப்பில் அனுப்புகின்றனர். 'கே.ஒய்.சி.'யை அப்டேட் செய்யாவிடில் வங்கிக் கணக்கு முடங்கிவிடும் என்றும் எச்சரிப்பர்.
அதற்கான 'லிங்க்'கைத் தொட்டு உள்ளே சென்றால்ஏ.டி.எம்., கார்டின் எண், பின்புறம் உள்ள சி.சி.வி.,மூன்று இலக்க எண், ஓ.டி.பி., அல்லது ஏ.டி.எம்., ரகசிய குறியீடு எண் பற்றி கேட்பர். அவசரம் அல்லது பதற்றத்தில் அதைக் கொடுப்போரின் வங்கிப் பணத்தை வழித்தெடுத்து விடுகின்றனர். எனவே இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக ஏ.பி.கே., எனமுடியும் பைலில் வரும் 'லிங்க்'குகளை பயன்படுத்த வேண்டாம் என்று சில வங்கிகளே எச்சரித்துஉள்ளன. அதை கவனத்தில்கொள்வது நல்லது.
இந்திய ரிசர்வ் வங்கி, 'இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த கொடுக்கல்வாங்கலும் இல்லையெனில் வங்கி கணக்கு செயல்படாத நிலை ஏற்படும். எனவே உங்கள் வங்கியின் எந்தக் கிளையிலும், அல்லது வீடியோ மூலம் உங்கள் கே.ஒய்.சி.,யை அப்டேட் செய்யுங்கள். வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் சில வங்கிகள்கே.ஒய்.சி., யை அப்டேட் செய்ய சொல்வதாலும், லிங்க் அனுப்புவதாலும் மோசடி பேர்வழிகளும் அதை போலியாக அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர்.