ADDED : ஜூன் 23, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : திருநகர் சவிதா பாய் மேல்நிலைப்பள்ளியில் ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடந்தது.
மன்றத் தலைவர் அயல்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் சிவராமன் வரவேற்றார். ஓய்வு தலைமை ஆசிரியர் கீதா மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கினார்.
ஆசிரியர்கள் மீனா, சாந்தி, செயின்ட்ஸ் குரூப் தலைவர் மரகதசுந்தரம், மக்கள் நல மன்ற நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், வேட்டையார், அரவிந்தன், பாஸ்கர்பாண்டி, ஜெயின்ஸ் குரூப் நிர்வாகிகள் நடராஜன், குருசாமி, பிரசன்னா, பத்மநாபன் பங்கேற்றனர்.