ADDED : நவ 16, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: மதுரை மேற்கு ஒன்றியம் பொதும்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ரகுபதி, மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் சண்முக வடிவேல், பி.டி.ஓ.,க்கள் பேராட்சி பிரேமா, லட்சுமிகாந்தம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கண்மணி மாதா வரவேற்றார்.
தேனி எம்.பி., தங்கத் தமிழ்ச்செல்வன் 77 மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பள்ளி புத்தாக்க மேம்பாடு திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகர், நிர்வாகிகள் வீரக்குமார், ஜெயராமன், விஷ்ணு மோகன், சங்கர் பங்கேற்றனர். ஆசிரியை சுதாமதி நன்றி கூறினார்.

