ADDED : அக் 26, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மாநகராட்சி பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள், கம்பர் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடந்தது.
இரண்டு பள்ளிகளிலும் 198 பேருக்கு வழங்கி மேயர் பேசுகையில் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவதுடன் விளையாட்டில் ஆர்வம், பொது அறிவு என பாடங்களை தாண்டிய திறமைகள், நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றார்.