ADDED : மே 20, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகம், கோல்டன் ஆர்மி குத்துச்சண்டை அகாடமி சார்பில் இலவச குத்துச்சண்டை பயிற்சி முகாம் மே 20 முதல் 30 வரை காலை 6:00 முதல் 8:30 மணி வரை ரேஸ்கோர்ஸில் நடக்கிறது. 10 முதல் 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம்.
இதில் சிறப்பாக விளையாடுவோர் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கலாம். தலைமை பயிற்சியாளர் ரமேஷ், உதவி பயிற்சியாளர் கிரிதரன் பயிற்சி அளிக்கின்றனர். மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் ராவணன், செயலாளர் செழியன், நிர்வாக செயலாளர் அழகுராஜன், பொருளாளர் செல்வம் ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்புக்கு: 93814 54545.