/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
/
போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
ADDED : அக் 10, 2025 03:09 AM
நாகமலை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2ம் நிலை போலீசார் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி தலைமையில் துவங்கப்பட்டது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு மைய இணை இயக்குநர் கண்ணன், வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்நாதன் ஆகியோர் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
இணை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்கண்ணன் நன்றி கூறினார். கல்லுாரித் தலைவர் கோடீஸ்வரன், துணைத் தலைவர் பாண்டியன், தாளாளர் சுந்தர், இணைச் செயலர் பாலமுருகன், பொருளாளர் தவமணி, துணை முதல்வர் பிரெட்ரிக், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராமமூர்த்தி, விரிவாக்கத்திட்ட டீன் மணிமாறன் பங்கேற்றனர். 92 மாணவர்கள் பயனடைந்தனர்.