ADDED : மே 17, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இங்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 4 வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கும், போலீஸ் எஸ்.ஐ.,தேர்வுக்குமான பயிற்சி வகுப்பு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்க உள்ளது. குரூப் 1 க்கான மாதிரித் தேர்வு மே 21 ல் மாநில அளவில் இணைய தளம் மூலம் நடக்க உள்ளது. குரூப் 4 க்கான பாடவாரியான தேர்வுகள் மே 19, 23, 26, 30 , ஜூன் 2, 6 ல் நடக்க உள்ளது. குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் ஜூன் 10, 17 ல் நடக்க உள்ளன.
இத்தேர்வில் பங்கேற்க tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குனர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.