ADDED : நவ 19, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை லட்சுமிஅம்மாள் அறக்கட்டளை சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சுற்றியுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு 2 மாத கால இலவச ஆரி, எம்பிராய்டரி, ஜர்தோஷி பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம்.
கைத்தையல் வகைகள், கல், கண்ணாடி, ஜமிக்கி வகை வேலைப்பாடு போன்ற 64 வகையான தையல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும். ஆதார், போட்டோ, ரேஷன் அட்டை, கல்விச்சான்றிதழ் கொண்டு வரவேண்டும். தொடர்புக்கு: 93446 13237.

