ADDED : ஜன 20, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் கிளப், ஓய்வு பெற்ற ஆசிரியர் அலுவலர் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
லயன்ஸ் நிர்வாகிகள் பிரேம்குமார், பத்மநாபன், கார்த்திகேயன், செல்வராஜ், ஓய்வுபெற்றோர்சங்கத் தலைவர் பெரியகருப்பன், பள்ளி நிர்வாகிகள் நடராஜன், பிரசாத்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
200க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தியதில் 40 பேர் கூடுதல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் செய்திருந்தார்.