ADDED : மார் 08, 2024 01:07 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு வாசன் கண் மருத்துவமனை சார்பில் போலீசார், அமைச்சு பணியாளர்கள் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார். துணை ஆணையர் மங்களேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமை டாக்டர் கீதா பரிசோதனைகள் குறித்து பேசினார். 100க்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
