நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கோகிலா சித்த மருத்துவமனை -ஆராய்ச்சி மையம், அரவிந்த் கண் மருத்துவமனை, இந்திய மருத்துவ நல அறக்கட்டளை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச ரத்தச் சர்க்கரையளவு, கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடந்தது.
டாக்டர் ஜெயவெங்கடேஷ் தலைமையில் டாக்டர்கள் நஜூமா சலீம், விடிட் பன்சால், சரவணப்பாண்டியன், பவித்ரா ஆலோசனை வழங்கினர். 130 பேருக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாததும், 55 பேருக்கு சர்க்கரை நோயால் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. கண் நரம்பு பாதிக்கப்பட்ட 24 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ள கோகிலா சித்த மருத்துவமனை நிர்வாக அதிகாரி செந்தில்நாதன், அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.