/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதிச்சியத்தில் இலவச பட்டா: கோர்ட் உத்தரவு
/
மதிச்சியத்தில் இலவச பட்டா: கோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 11, 2025 05:39 AM
மதுரை : மதுரை மதிச்சியத்தில் தகுதியற்றவர்களுக்கு வழங்கிய இலவச பட்டாக்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை கனிமொழி தாக்கல் செய்த மனு:மதுரை மதிச்சியம் கிழக்கு தெரு குறிப்பிட்ட சர்வே எண் நிலம் நிலமற்ற ஏழைகளுக்கானது. சிலருக்கு சாதகமாக பட்டா வழங்கியதை ரத்து செய்ய கலெக்டர், மதுரை வடக்கு தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: இலவச பட்டா வழங்கப்பட்ட அனைவருக்கும் தகுதி சரிபார்க்க ஆர்.டி.ஓ., வாய்ப்பு வழங்க வேண்டும். தகுதியற்றவர்கள் காணப்பட்டால், ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.