ADDED : செப் 23, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை திருநகர் ஜெயின்ட்ஸ் குழுமம், பாண்டியன் நகர் கௌதம் மருத்துவமனை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
தலைவர் மரகசுந்தரம் தலைமை வகித்தார். ஓய்வு போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் துவக்கி வைத்தார். கவுன்சிலர் இந்திராகாந்தி, ஜெயின்ட்ஸ் நிர்வாகிகள் குருசாமி, ரங்கராஜ், ராமலிங்கம், பிரசன்ன வெங்கடேஷ், பத்மநாபன், அய்யர், பிச்சுமணி, அரசு போக்குவரத்து துறை ஓய்வு பெற்ற பொதுமேலாளர் கிருஷ்ணசாமி பங்கேற்றனர். டாக்டர்கள் ராமசுப்பிரமணியம், ராதிகா தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.