ADDED : செப் 15, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவிகள், பேராசிரியைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முதல்வர் பாத்திமா மேரி துவக்கி வைத்தார். டாக்டர்கள் டயானா தெரஸ் ஆல்வின் சந்தோஷ் ஜெயந்த் முரளி தலைமையிலான மருத்துவ குழு பரிசோதனை செய்தது. டாக்டர் டயானா தெரஸ் பேசுகையில், இளமையுடன் வாழ சிரிப்பு, மூச்சுப் பயிற்சி, படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டு, ஆரோக்கிய உணவு, ஆழ்ந்த துாக்கம் அவசியம் என்றார்.
சுவாச விகிதம், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 600 மாணவிகள் பயனடைந்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
