ADDED : செப் 15, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.
துணைமுதல்வர் மல்லிகா குத்துவிளக்கேற்றினார். முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் பேசுகையில் ‘‘முதலாண்டு மாணவர்களே எதிர்காலத்தில் நமது தலைமுறைக்கான மருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள். ஆயுள் முழுவதும் மாணவர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். ‘ராகிங்’ நடைமுறைக்கு எதிராக கல்லுாரி நிர்வாகம் கடுமையாக செயல்படும். பெறப்படும் புகார்கள் விசாரிக்கப்படுவதோடு புகார் அளித்தவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும்’’ என்றார்.
