ADDED : ஜூன் 24, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : மதுரை ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி.
மக்கள் நல மன்றம் சார்பில் திருநகர் சவீதாபாய் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனா வரவேற்றார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். கவுன்சிலர் இந்திரா காந்தி, மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கினார். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு மேலாளர் கிருஷ்ணசாமி, சமூக ஆர்வலர் நாகராஜன், மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் வேட்டையார் பேசினர். நிர்வாகிகள் அண்ணாமலை, பாஸ்கரபாண்டி, அரவிந்தன் பங்கேற்றனர். ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.