நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்டக் கிளை சார்பில் பிராமண சமுதாயத்தில் நலிவடைந்த பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ரவி தலைமை வகித்தார்.
வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், கிருஷ்ணய்யர், பேராசிரியர் பார்த்தசாரதி, இல.அமுதன், கிளைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோச்சடை கிளையின் புதிய தலைவராக முரளிதரன், செயலாளராக வினோத், பொருளாளராக ரவிக்குமார் நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீராமன், பொருளாளர் சீனிவாசன் ஏற்பாடுகளை செய்தனர்.