நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஆக. 18 முதல் ஒரு மாதத்திற்கு எலக்ட்ரிகல் வயரிங், சர்வீசிங் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் இருபாலர்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம்.விருப்பமுள்ளவர்கள்ஆக.,18க்குள் 96262 46671ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சிக்கு வருபவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.