ADDED : டிச 02, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை சார்பில் மல்லிகை, முருங்கை ஏற்றுமதி தர நிலைகள் குறித்த இலவச பயிற்சி டிச. 8 முதல் 24 வரை திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் நடக்கிறது.
மல்லிகை, முருங்கை பயிர்களுக்கான சாகுபடி, நோய், பூச்சிக் கட்டுப்பாட்டு முறை, சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி வழிமுறைகள், பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படும். கண்டுணர்வு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்தது 8வது தேர்ச்சி பெற்ற 18 முதல் 50 வயதுக்குட்பட்ட விவசாயிகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம். 70 சதவீத வருகைப்பதிவு அவசியம். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு: 86100 32763.

