தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உணவுப்பதப்படுத்துவோருக்கு இலவச பயிற்சி

உணவுப்பதப்படுத்துவோருக்கு இலவச பயிற்சி

உணவுப்பதப்படுத்துவோருக்கு இலவச பயிற்சி


ADDED : ஜூலை 15, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பிரதமரின் உணவுப்பதப்படுத்துதல் திட்டத்தின் (பி.எம்.எப்.எம்.இ.,) கீழ் உள்ள பயனாளிகளுக்கு உணவுத்துறையில் தொழில் வளர்ச்சி குறித்த இலவச பயிற்சி மதுரை மாவட்ட தொழில் மைய வளாகத்தில் ஜூலை 21 முதல் 23 காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை அளிக்கப்படுகிறது.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) ஏற்பாடுகளை செய்துள்ளது. பயிற்சியின் முடிவில் உதவித் தொகையுடன் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

மதிய உணவு வழங்கப்படும். பங்கேற்க விரும்புபவர்கள் பி.எம்.எப்.எம்.இ., பதிவெண் அடையாள நகல், ஆதார் நகர், வங்கி பாஸ்புக் நகல், போட்டோவுடன் வரவேண்டும். 34 பேருக்கு அனுமதி உண்டு.

அரிசி ஆலை, பருப்பு மில், மாவு மில், எண்ணெய் ஆலை, மசாலா, சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகளுக்கான மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கு 35 சதவீத அளவுக்கு அரசு மூலதன மானியம் தருகிறது. அதிகபட்சம் ரூ.10 லட்சத்திற்கான திட்டத்துடன் 3 சதவீத வங்கி வட்டி மானியம் உண்டு. வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டமும் சேர்த்து பெறுவதற்கு பதிவு செய்து தரப்படும். முன்பதிவுக்கு 97915 41990.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us