ADDED : செப் 24, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எஸ்.எஸ்., காலனியில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் - பெட்கிராட் சார்பில் இலவச சிறுதானிய, சத்து மாவு, சிறுதானிய இனிப்பு கார வகைகள், பாரம்பரிய உணவு, பத்திய உணவு பொருட்கள், மசாலா பொருட்கள் தயாரித்தல், காய்கறி, பழங்களை பதப்படுத்துதல் குறித்த பயிற்சி நடக்கவுள்ளது.
தொழில் துவங்க எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ், மாவட்ட தொழில் மையம் மூலமாக காட்டேஜ் சான்றிதழ் இலவசமாக பெற்றுத் தரப்படும். மானியக் கடன் பெற்றுத் தரப்படும். பயிற்சியில் சேர 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலை 10:00 மணி முதல் மதியம் 2 மணி வரை 26 நாட்களுக்கு பயிற்சி நடக்கும். பெண்களுக்கு மட்டும் அனுமதி. உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 93446 13237 ல் தொடர்பு கொள்ளலாம்.