ADDED : நவ 20, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நவ. 26ல் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.
தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18 - 50 வயது வரையுள்ள இருபாலரும், திருநங்கைகளும் பங்கேற்கலாம். உணவு, தங்குமிடம், உபகரணங்கள் இலவசம். விருப்பமுள்ளவர்கள் 96262 46671ல் நவ. 25க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆதார், ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ, கல்வி சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

