ADDED : செப் 27, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாளை (செப்.28) கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது
. மாநகராட்சி பகுதியில் தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை, பழங்காநத்தம் கால்நடை மருந்தகத்தில் தடுப்பூசி செலுத்தலாம் என மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) நந்தகோபால் தெரிவித்துள்ளார்.