UPDATED : நவ 17, 2026 07:27 PM
ADDED : நவ 17, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 30ஆயிரத்து 250 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் வராமல் தடுக்கும் இலவச தடுப்பூசி முகாம் நவ. 23 ல் தொடங்குகிறது.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் டிச. 24 வரை இம்முகாம் நடக்கிறது. இதற்காக 65 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் தடுப்பூசி போடலாம்.
