தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம்


UPDATED : நவ 17, 2026 07:19 PM

ADDED : நவ 17, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:19 PM ADDED : நவ 17, 2026 07:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணாதுரை மாரத்தான் ஓட்டம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 17 முதல் 25 வயது ஆடவருக்கான எட்டு கி.மீ., துார மாரத்தான் ஓட்டத்தில் தயாசாகர் முதலிடம், தினேஷ்பாண்டி இரண்டாமிடம், அமெரிக்கன் கல்லுாரி ஹரிராம் மூன்றாமிடம், விஷால் நான்காமிடம் பெற்றனர்.

மகளிருக்கான 5 கி.மீ., துார ஓட்டத்தில் கோபிகா முதலிடம், ஆர்த்தி இரண்டாமிடம், லேடிடோக் கல்லுாரி மதுமிதா மூன்றாமிடம், அமெரிக்கன் கல்லுாரி பூர்ணா நான்காமிடம் பெற்றனர்.

25 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் 10 கி.மீ., துார ஓட்டத்தில் தென்னரசு முதலிடம், கோகுல் இரண்டாமிடம், பிரதீப் மூன்றாமிடம், சிவசக்திநாதன் நான்காமிடம் பெற்றனர். மகளிருக்கான5 கி.மீ., துார ஓட்டத்தில் லட்சுமிபிரியா முதலிடம், யோகப்ரியா இரண்டாமிடம், ப்ரீத்திகா ஸ்ரீ மூன்றாமிடம், சுமிதா நான்காமிடம் பெற்றனர்.

17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 15கி.மீ., துார சைக்கிள் ரேஸ் போட்டியில் உறங்கான்பட்டி அரசுப் பள்ளி சிங்கலோச்சனா முதலிடம், அக்ஷரா பள்ளி ஜீவிதா ஸ்ரீ இரண்டாமிடம், உறங்கான்பட்டி அரசுப் பள்ளி ராதிகா மூன்றாமிடம், கோட்டநத்தம் பட்டி அரசுப் பள்ளி தேவதர்ஷினி நான்காமிடம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us