நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு அறிவித்த இலவச திருமணங்கள் நேற்று நடந்தது.
அனுப்பானடி ராஜேஷ்-சந்தியா, மகேந்திரன்-அனிதா ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் கோயிலில் நடந்தது. மணமக்களுக்கு கோயில் அறங்காவலர்குழு தலைவர் சத்யபிரியா, தலா 4 கிராம் தங்கம், பட்டுச் சேலை, வேஷ்டி, சட்டை, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ரூ. 6 லட்சம் மதிப்பில் சீதனமாக வழங்கினார்.
கோயில் துணை கமிஷனர் சூரியநாராயணன், தெற்கு மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் பாலாஜி தலைமையில் மணமக்களுக்கு கோயிலில் திருமணம் நடத்தப்பட்டது.