UPDATED : ஜூலை 19, 2026 10:04 PM
ADDED : ஜூலை 19, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
மதுரை:திருச்சி கள்ளிக்குடி அன்பில் நகரைச் சேர்ந்தவர் உமா சங்கர், 26. இவர்மீது 2010ல் பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதியப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. 2018ல் ஜாமினில் வெளிவந்தவர், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்ட் அடிப்படையில் மத்திய குற்றத்தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் திருச்சியில் உமா சங்கரை கைது செய்தனர். பிணையை மீறி தலைமறைவாகி நீதிமன்ற விசாரணையை தவிர்த்ததாக மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
