/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு மறு வாழ்வு அளித்த இளைஞர்; அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

ADDED : ஆக 18, 2025 03:42 AM

மதுரை : மதுரையில் மூளைச்சாவு அடைந்த 22 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு ஐந்து நோயாளிகளுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் மணிகண்டன் 22. ஆக., 14ல் விபத்தில் சிக்கியவர் மேல் சிகிச்சைக்காக மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மூளைச்சாவு அடைந்த நிலையில் குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் செய்ய டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குடும்பத்தினரின் ஒப்புதலுடன், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நேற்று மணிகண்டனின் உறுப்புகளை டாக்டர்கள் தானம் பெற்றனர்.
அவரது கல்லீரல் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. ஒரு சிறுநீரகம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கும், மற்றொரு சிறுநீரகம், திருச்சி காவேரி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும், கருவிழிகள் இரண்டும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் 5 நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவக்குழுவினர் மணிகண்டன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது.