/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் கேலோ இந்தியா தேசிய போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு
/
மதுரையில் கேலோ இந்தியா தேசிய போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு
மதுரையில் கேலோ இந்தியா தேசிய போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு
மதுரையில் கேலோ இந்தியா தேசிய போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு
ADDED : ஜன 18, 2024 06:35 AM

மதுரை: மத்திய அரசின் கேலோ இந்தியா' விளையாட்டுக்கான தேசிய அளவிலான கட்கா, கோகோ போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜன.,21ல் துவங்க உள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி அரங்கப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஜன.,21 முதல் 23 வரை ஆடவர், மகளிர் கட்கா ஒற்றையர், இரட்டையர் போட்டிகளும் ஜன., 26 முதல் 30 வரை கோகோ போட்டிகளும் நடக்க உள்ளன. தடகள டிராக்கின் உட்பகுதியில் உள்ள கால்பந்து அரங்கு கட்கா விளையாட்டுக்காக மாற்றியமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பிராக்டீஸ் செய்யவும், போட்டி நடத்தவும் இரு அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
கட்கா போட்டி முடிந்தவுடன் 2 பிராக்டீஸ் அரங்கு, ஒரு போட்டி அரங்கு கோகோ போட்டிக்காக அமைக்கப்படும். இப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், தளபதி எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உடனிருந்தனர்.