ADDED : நவ 13, 2026 06:49 PM
மதுரை: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்துார் சென்று வரும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் – திருச்செந்துார்
* இன்று (நவ. 14) மாலை 4:10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06007), நாளை அதிகாலை 4:00 மணிக்கு திருச்செந்துார் செல்கிறது. தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலுார், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
* மறுமார்க்கத்தில் நாளை (நவ.15) இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06008), மறுநாள் மதியம் 12:00 மணிக்கு எழும்பூர் செல்கிறது. திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம் ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
திருநெல்வேலி – தாம்பரம்
நவ. 15 இரவு 11:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06010) மறுநாள் காலை 9:55 மணிக்கு தாம்பரம் செல்கிறது. மறுமார்க்கத்தில் நவ.16 மதியம் 12:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06009), இரவு 11:40 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
திருச்செந்துார் – எழும்பூர் (06008), திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி (06010/06009) ரயில்களுக்கு இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
