நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது. செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார்.
எழுத்தாளர் திருமலை எழுதிய காந்தியும் சுற்றுச்சூழலும் புத்தகத்தை கலெக்டர் பிரவீன் குமார் வெளியிட, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வெங்கடேஷ் பிரஞ்னா பெற்றார்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த ஓவியம், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிர்வாகக் குழு உறுப்பினர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ஏரன் பவுண்டேஷன், ஈஷா யோகா மையம் சார்பில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கலை நிகழ்ச்சிகளை அமைதி சங்கத்தலைவர் சரவணன், செயலாளர் சிவா ஒருங்கிணைத்தனர். கல்வி அலுவலர் நடராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.