/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணிகள் முடிந்தும் பலமாதமாக காத்திருக்குது காந்திமியூசியம் இதையும் கவனியுங்க முதல்வரே மதுரையில் புதுப்பொலிவு பெற்றும் தள்ளிப்போகும் திறப்பு விழா
/
பணிகள் முடிந்தும் பலமாதமாக காத்திருக்குது காந்திமியூசியம் இதையும் கவனியுங்க முதல்வரே மதுரையில் புதுப்பொலிவு பெற்றும் தள்ளிப்போகும் திறப்பு விழா
பணிகள் முடிந்தும் பலமாதமாக காத்திருக்குது காந்திமியூசியம் இதையும் கவனியுங்க முதல்வரே மதுரையில் புதுப்பொலிவு பெற்றும் தள்ளிப்போகும் திறப்பு விழா
பணிகள் முடிந்தும் பலமாதமாக காத்திருக்குது காந்திமியூசியம் இதையும் கவனியுங்க முதல்வரே மதுரையில் புதுப்பொலிவு பெற்றும் தள்ளிப்போகும் திறப்பு விழா
ADDED : ஜன 31, 2026 06:35 AM

மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் ரூ.12.5 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தும், திறப்பு விழா எப்போது நடக்கும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் 2022 சுதந்திர தின உரையில், 'காந்தி மியூசியம் புதுப்பிக்கப்படும்' என அறிவித்தார். இதையடுத்து அதே ஆண்டு அக்டோபரில் சீரமைப்புப் பணிகள் துவங்கின. திறந்தவெளி அரங்கம், 'டிஜிட்டல் பணிகள், தரைத்தளம், சுவர்கள் பாரம்பரிய முறையில் உள்ளவாறு புதுப்பிக்கப்பட்டன. லிப்ட் வசதி, 2 ம் தளத்தில் 50 பேர் அமர்ந்து காந்தியின் வரலாற்றை கண்டுகளிக்கும் வகையில் சிறு தியேட்டர் அமைத்தல் போன்ற பணிகள் நடந்தன.
அறிகுறியே தெரியவில்லை ஆகஸ்டில் மியூசியத்தை ஆய்வு செய்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், 'காந்தி மியூசிய பணிகள் நிறைவடைந்து, 2025 அக்டோபரில் திறக்கப்படும்' என்றார். அவர் கூறியது போல பணிகள் நிறைவடைந்ததே தவிர, மியூசியத்தை திறப்பதாக இல்லை. மியூசியம் புதுப்பொலிவுடன் உள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட மாதத்தை தாண்டி 3 மாதங்களைக் கடந்தும் திறப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
2024- - 2025ஆம் ஆண்டில் மட்டும் இங்கு 4 லட்சத்து 28 ஆயிரத்து 411 பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதில் வெளிநாட்டு பயணிகள் மட்டும் 9 ஆயிரத்து 329 பேர். நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையான காலத்தில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 849 பேர் வந்துள்ளனர். இந்நிலையில் திறப்பு விழா தாமதத்தால், இந்தாண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்து வருகிறது.
மியூசிய செயலாளர் நந்தாராவ் கூறியதாவது: காந்தி மியூசியத்தின் மையக் கட்டடம், திறந்தவெளி அரங்கம், குமரப்பா குடில் ஆகியவற்றின் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.பாரம்பரிய முறையில் பழைமை மாறாமல் கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் ரோடு வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு வசதிகளுடன் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
பயணிகள் ஏமாற்றம் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கென மேல் தளம் செல்ல லிப்ட் வசதி, ஆர்.ஓ., குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் போட்டோக்களை பொருத்துதல், டிஜிட்டல் வீடியோ தொடர்பான பணிகள் மட்டுமே இன்னும் பாக்கி உள்ளன.
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, காந்தி வாழ்க்கை வரலாறு, அவர் பயன்படுத்திய பொருட்கள், தமிழ்நாட்டில் காந்தி என்ற 4 தலைப்புகளில் டிஜிட்டல் வீடியோ தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்றார்.
தியாகிகள் சிலர் கூறுகையில், 'மறுசீரமைப்பு பணிகளால் காந்தியின் ரத்தக்கறை படிந்த ஆடை, சால்வை, கண்ணாடி, செருப்பு உட்பட 14 பொருட்களை பார்க்க முடியாமல் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். காந்தி மியூசியம் மீது முதல்வர் ஸ்டாலின் பார்வை பட்டால், திறப்பு விழா விரைந்து நடக்கும் என்ற எதிர்பார்க்கிறோம், என்றனர்.

