ADDED : ஆக 02, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரம ஆண்டு விழா நேற்று பள்ளிக் கலையரங்கில் நடந்தது.
ஆசிரம தலைவர் ரகுபதி வரவேற்றார். செயலாளர் ராகவன் ஆண்டறிக்கை வாசித்தார். ஈரோடு ராமலிங்கம் கட்டுமான நிறு வனம், கல்வி அறக் கட்டளை நிறுவனங்களின் தலைவர் ராமலிங்கம், ஆசிரம கவுரவத் தலைவர் வேங்கடசாமி, மதுரை அரவிந்த் கண் பராமரிப்பு அமைப்பு இயக்குனர் துளசிராஜ் உட்பட பலர் பேசினர்.
ஆசிரம நிர்வாகக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் காந்திநிகேதன் 85 மின் பத்திரிக்கையை பகிர்ந்து கொண்டார். செயலாளர் கீதா நன்றி கூறினார்.