தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கேங்மேன்கள் ஆர்ப்பாட்டம்

 கேங்மேன்கள் ஆர்ப்பாட்டம்

 கேங்மேன்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 29, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: கேங்மேன்களை கள உதவியாளர்களாக பதவிமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மதுரை புதுார் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர் செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். துணைப் பொதுச்செயலாளர் கோகுல்வர்மன் முன்னிலை வகித்தார்.

முத்தரப்பு ஒப்பந்தம்படி கேங்மேன்களை கள உதவியாளர்களாக பதவிமாற்றம் செய்ய வேண்டும். விருப்ப மாறுதல் பெற்ற கேங்மேன்களுக்கு பணிவிடுப்பு அளிக்க வேண்டும். வேலைப்பளு இல்லாத இடங்களில் கேங்மேன்களை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தினர்.

மாநில செயலாளர் முத்துலட்சுமணன்,மண்டல செயலாளர் உமாநாத்,சி.ஐ.டி.யு., செயலாளர் லெனின், மதுரை புறநகர் தலைவர் அரவிந்தன்,சங்க நிர்வாகிகள் முருகன், தேவராஜ், திருமுருகன், சுப்புராம் பங்கேற்றனர். நகர் தலைவர்குழந்தைவேலு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us