/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் வழிப்பறி காரில் வந்து கும்பல் கைவரிசை

ADDED : அக் 23, 2024 05:00 AM

மேலுார் : மதுரை மாவட்டம் வெள்ளலுார் பகுதியில் ஆட்டோவில் வந்த டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் வழிப்பறி செய்து காரில் தப்பிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மேலுார் அருகே பெருமாள்பட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பாண்டியராஜன் 47, ஊழியர் விஜயகுமார் 45, மேற்பார்வையாளராக ராஜ்குமார் 48, பணிபுரிகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மூவரும் விற்பனை முடித்து ரூ.1.85 லட்சத்துடன் ஆட்டோவில் மேலுாருக்கு புறப்பட்டனர்.
ஆட்டோவை கருத்தபுளியம்பட்டி திருமலை 53, ஓட்டினார். இவர், இவர்களுக்கு தொடர்ந்து ஆட்டோ ஓட்டி வருபவர்.
வெள்ளலுார் முனியாண்டி கோயில் அருகே கார் ஒன்று மோதுவது போல் குறுக்கே வந்தது. சுதாரித்த திருமலை ஆட்டோவை கிராமத்திற்குள் திருப்பி தப்ப முயற்சித்தார்.
ஆத்திரமுற்றவர்கள் காரை மோத செய்ததில் ஆட்டோ கவிழ்ந்தது.
காரில் இருந்து வாள், கத்தியுடன் இறங்கிய 4 பேர் ஆட்டோ கண்ணாடியை உடைத்ததோடு, டிரைவரை தலையில் வெட்டியும், மற்றவர்களை கத்தியால் கீறியும் ரூ.ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 590 ஐ பறித்து தப்பினர்.
திருமலை மதுரை அரசு மருத்துவமனை, மற்ற மூவரும் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.