/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தகவல் தொடர்பில் இடைவெளி; அமைச்சர் கூட்டம் தள்ளிவைப்பு
/
தகவல் தொடர்பில் இடைவெளி; அமைச்சர் கூட்டம் தள்ளிவைப்பு
தகவல் தொடர்பில் இடைவெளி; அமைச்சர் கூட்டம் தள்ளிவைப்பு
தகவல் தொடர்பில் இடைவெளி; அமைச்சர் கூட்டம் தள்ளிவைப்பு
ADDED : ஆக 06, 2025 01:15 AM
மதுரை; மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வணிகவரித்துறை சார்பில் ஜி.எஸ்.டி., தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மதியம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். கலெக்டர் பிரவீன்குமார், துறை இணை கமிஷனர் கீதாபாரதி, துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அரசு ஒப்பந்ததாரர்கள் ஜி.எஸ்.டி., வரியாக 2 சதவீதம் செலுத்த வேண்டும். இத்தொகையை அரசுக்கு செலுத்தாமல் ஐந்தாண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதுபற்றிய விவரங்கள், அவற்றை தாமதமின்றி செலுத்துவது குறித்து பேசினர்.
அலுவலர்களிடம் கேட்ட போது பலருக்கும் பதில் தெரியவில்லை. நேற்றுமுன்தினம் இரவு சிலருக்கு சொல்லியும், பலருக்கு சொல்லாமலும் இருந்ததே காரணம்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பயிற்சி எனக்கருதியே வந்துள்ளனர். இதனால் கூட்டத்தை முழுமையாக நடத்த முடியாமல் போய்விட்டது. முன்தயாரிப்பு இல்லாமல் பங்கேற்றதால் மற்றொரு நாள் இக்கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.