/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் துவங்கியது கிரடாய் 'பேர் புரோ' வீடு, மனைகள் கண்காட்சி கனவு இல்லத்துக்கு ஜன., 28 வரை வாய்ப்பு

ADDED : ஜன 27, 2024 05:35 AM

மதுரை : மதுரை தமுக்கம் அரங்கில் இந்திய கட்டுமான நிறுவனங்கள் கூட்டமைப்பின் (கிரடாய்) சார்பில் 'பேர் புரோ 2024' எனும் வீடு, மனைகள் விற்பனை கண்காட்சி நேற்று கோலாகலமாக துவங்கியது.
மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் கண்காட்சியை திறந்தார். விஸ்வாஸ் புரமோட்டார்ஸ் நிறுவனர் சீத்தாராமன் தலைமை வகித்தார். கிரடாய் தமிழ்நாடு தலைவர் இளங்கோவன், மதுரை தலைவர் முத்துவிஜயன், சேர்மன் ராமகிருஷ்ணன், செயலாளர் யோகேஷ், பொருளாளர் ஜெயகுமார், துணைத் தலைவர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நாளிலேயே கண்காட்சியை பார்வையிட நுாற்றுக்கணக்கானோர் குவிந்தனர். ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். மக்களின் கனவு இல்லத்தை எளிதில் சொந்தமாக்கும் வகையில் கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட பில்டர்ஸ், 100க்கும் மேற்பட்ட பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பங்கேற்றுள்ளனர். கண்காட்சியில் வீடு, மனைகள் முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்த வட்டி விகித்தில் கடன் அளிக்க 10க்கும் மேற்பட்ட வங்கிகள், என்.பி.எப்.சி.,க்கள், கட்டுமானப் பொருட்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன. வீடு கட்டவும், வாங்கவும் தேவையான அனைத்து வாய்ப்புகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ளதாலும், அலைந்து திரியாமல், சந்தேகங்களுக்கு எளிதாக தீர்வுகள் கிடைப்பதாலும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.