ADDED : மார் 19, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சிக்கு நகரி பிரிட்டானியா நியூட்ரிஷன் பவுண்டேஷன் சார்பில் ரூ.1.20 லட்சம்மதிப்பில் குப்பை சேகரிப்பு வண்டிகள் வழங்கப்பட்டன.
மன்னா புட்ஸ் மேலாளர்கள் விக்னேஷ், ரமேஷ்வரன், மாவட்ட திட்ட அலுவலர் ரஞ்சிதா சமூக பொறுப்பு நிதியில் இருந்து ஊராட்சி சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 4 குப்பை சேகரிக்கும் வண்டிகளை ஊராட்சி தலைவர் நாகலட்சுமியிடம் வழங்கினர்.
களப்பணியாளர்கள் ஆனந்த், பானுப்ரியா, தேவிபிரியா, வாஞ்சிநாதன், ஜஹின் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலக உதவியாளர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

