/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய் கரைகளில் கொட்டப்படும் கழிவுகள்
/
கண்மாய் கரைகளில் கொட்டப்படும் கழிவுகள்
ADDED : பிப் 14, 2024 05:50 AM

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களின் கரைகளில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
நிலையூர் பெரிய கண்மாய் கரையில் அனைத்து கழிவுகளும் கொட்டப்படுகின்றன. பலர் குப்பைக்கு தீ வைப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகை, வாகன ஓட்டிகளை துன்புறுத்துகிறது.
'குப்பை கொட்டுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை போர்டு அருகிலேயே கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கண்மாய் தண்ணீரும் மாசடைகிறது.
அதே போன்று சேமட்டான்குளம் கண்மாய் கரையை சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கண்மாய் தண்ணீர் மாசடைந்து சுற்றியுள்ள குடியிருப்புகளின் நிலத்தடி நீரின் தன்மையும் மாறிவிட்டது.

