
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : மதுரை மேற்கு ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதலை மெயின் ரோட்டில் உள்ள இப்பள்ளி முன்பு உள்ள காலி மனைகளில் கருவேலம் மரங்களும், மழைநீரும் சூழ்ந்துள்ளது.
இந்த ரோட்டோரம் மழை நீரில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை தினமும் இப்பகுதியினர் குவித்துள்ளனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பள்ளி மாணவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
குப்பை மேடாக காட்சி தரும் இப்பகுதியில் கால்நடைகளும் மேய்ச்சலுக்கு விடப்படுவதால், அவற்றின் கழிவுகளாலும் சுகாதாரம் பாதிக்கிறது. இங்கு கொட்டப்படும் குப்பையை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அகற்ற வேண்டும்.
மேலும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

