/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பை பிரச்னைஎம்.எல்.ஏ., சமரசம்
/
குப்பை பிரச்னைஎம்.எல்.ஏ., சமரசம்
ADDED : டிச 18, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தெற்கு தொகுதி 42வது வார்டு சிரஞ்சீவி நகரில் தெருவிளக்கு, மோசமான ரோடுகள், மின்சாரம், குவிந்த குப்பையை அகற்றாதது உள்ளிட்ட பிரச்னைகள் நீடித்தன.
பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வெறுத்துப்போன அப்பகுதி பெண்கள் எம்.எல்.ஏ., பூமிநாதனை சந்தித்து முறையிட்டனர்.
அவர், சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று, மாநகராட்சி சுகாதார அலுவலர் கோபால், மின்வாரிய உதவிப் பொறியாளர் ராஜா, குடிநீர் பதிக்கும் அலுவலர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.
பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கவுன்சிலர் கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

