sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி :மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி :மதுரை

இன்றைய நிகழ்ச்சி :மதுரை

இன்றைய நிகழ்ச்சி :மதுரை


ADDED : டிச 18, 2025 06:35 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மஹா பெரியவா விக்ரம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு பூஜை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

மாதாந்திர அனுஷ வழிபாடு, காஞ்சி மகா பெரியவர் ஜன்ம நட்சத்திர வழிபாடு, காஞ்சி காமகோடி மடம் கிளை, முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 8:00 மணி, குரு வந்தனம், பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: சோபனாராணி, முன்னிலை: பவளம், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர் களுக்கான விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணப் போட்டி: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 3:00 மணி.

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

மறை தந்த மாமுனிவர்கள்: நிகழ்த்துபவர் - கோவிந்தராஜ பட்டாச்சாரியார், மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.

மார்கழி மாத சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.

72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

தியானம், சத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம்: மேற்கு சித்தாஸ்ரமம், 4, மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: சித்தர் அகத்தியனார் சித்த யோக தியான மையம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

பொது பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம், மதுரை மாவட்ட அனைத்து திருச்சபைகள் நடத்தும் கிறிஸ்து பிறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரம், பைபாஸ் ரோடு, நேரு நகர், பி.ஆர்.சி., டிப்போ அருகில், மதுரை, நலத்திட்ட உதவிகள் வழங்குபவர்: துணை முதல்வர் உதயநிதி, மாலை 4:00 மணி.

சென்னை சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்க நிறுவனம் நடத்தும் 'எம்.எஸ்.எம்.இ., கனெக்ட் 2025' தொழில்துறை கருத்தரங்கம், கண்காட்சி தொடக்க விழா: மடீட்சியா ஹால், 1ஏ/4ஏ டாக்டர் அம்பேத்கர் ரோடு, மதுரை, தலைமை விருந்தினர்: கலெக்டர் பிரவீன்குமார், முன்னிலை: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்க நிறுவன இணை இயக்குநர் சுரேஷ்பாபு, பங்கேற்பு: இந்திய சிறு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு பிராந்திய சேர்மன் கார்த்திகேயன், மடீட்சியா தலைவர் செந்தில்குமார், ஏற்பாடு: மடீட்சியா, இந்திய சிறு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு, காலை 11:00 மணி.

சவுராஷ்டிரா எழுச்சி மாநாட்டிற்கான ஆதரவு கூட்டம்: சமுதாயக் கூடம், கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

மதுரை தெற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம், பவர்ஹவுஸ் ரோடு, சுப்பிரமணியபுரம், மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: காமராஜர் சிலை, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, துவங்கி வைப்பவர்: நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனீஸ்வரன், ஏற்பாடு: கணினி அறிவியல் துறை, காலை 10:00 மணி. பெண்கள் மேம்பாட்டு அமைப்பு, நேயா டிரஸ்ட் நடத்தும் எஸ்.வி.என்., பஜார், காலை 10:00 மணி, மேலாண்மைத் துறை சார்பில் மூலதன சந்தை வாய்ப்பு பற்றிய கருத்தரங்கம்: காலை 10:45 மணி.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பால் ஜெயகர், மதியம் 2:00 முதல் மாலை 4 மணி வரை.

தேசிய அளவிலான மெய்நிகர் ஆசிரியர் மேம்பாட்டு செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, வணிகம், ஸ்டார்ட் அப் களில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு தலைப்பில் பேசுபவர்: பெங்களூர் ஜெயின் கல்லுாரி உதவிப்பேராசிரியர் முரளிதர், மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி.

மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, சேதுபதி பள்ளி எதிரில், சிம்மக்கல், மதுரை, ஆலோசனை வழங்குபவர்கள்: டாக்டர்கள் கமலபாபு, பிரேம்குமார், சுரேந்திர பால், சவுந்தர்யா ராஹினி, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

இலவச காது பரிசோதனை, காது கேட்கும் கருவி பயிற்சி: குளோபல் ஹியரிங் ஏய்டு சென்டர், 7, டாக்டர். சத்தார் ரோடு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில், அண்ணா நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

விளையாட்டு 29வது ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவு மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், காலை 7:00 மணி.






      Dinamalar
      Follow us