ADDED : ஏப் 22, 2025 06:16 AM

சோழவந்தான்: மேலக்காலில் நாளுக்கு நாள் கொட்டப்படும் குப்பையால் வைகையாறு மாசுபட்டு வருவதுடன் நிரந்தர குப்பை கிடங்காக மாறி சுகாதார சீர்கேடு, விவசாயம் பாதிக்கிறது.
இந்த ஊராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பை மட்டுமல்லாது, இறைச்சி கடை உரிமையாளர்களும் கழிவுகளை கொட்டி மாசுபடுத்துகின்றனர். இக்கழிவுகளை கொட்டி எரிப்பதுடன், அவ்வப்போது எரிந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஆற்றுக்குள் தள்ளுகின்றனர். இதனால் காற்று, நீர், நிலம் மாசுபடுகிறது.
இந்த குப்பை கழிவுகள் கால்வாய் வழியாக கிராமப்புற பாசன கண்மாய்கள், வயல்களில் சென்று விவசாய நிலங்களை பாழ்படுத்துகின்றன. மேலும் கிராமங்களில் சேகரிக்கும் குப்பையை மேலக்கால் கண்மாயில் கொட்டுகின்றனர். கோயில் விழாக்களின் போது வைகையில் இருந்துதான் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து சென்று வழிபடுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.