ADDED : ஜூன் 27, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: சேடபட்டி வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி கூறியதாவது: சேடப்பட்டி வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தக்கை பூண்டு விதைகளை விதைத்து மடக்கி உழுவதை ஊக்கப்படுத்தும் விதமாக 50 சதவீத மானிய விலையில் தக்கைபூண்டு விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 800 மானியம் வழங்கப்பட உள்ளது. கோடை உழவு செய்வதால் கோடை மழையின் மூலம் பெரும் நீரானது நிலத்தின் அடிப்பகுதி வரை உறிஞ்சப்பட்டு மண்ணின் ஈரம் தக்க வைக்கப்படுகிறது என்றார்.