ADDED : ஜூலை 24, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி: இயற்கை உரத்திற்கான தக்கை பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம் என டி. கல்லுப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் விமலா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: விவசாயிகள் சாகுபடியில் செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மண்ணின் தன்மை மாறி வருகிறது. இதை தவிர்க்க தக்கை பூண்டு விதைகளை விதைத்து 45 நாட்களில் வளர்ந்து பூப்பூக்கும் நிலையில் செடிகளை அதே நிலத்தில் உழுது உரமாக பயன்படுத்தலாம். தக்கை பூண்டு விதைகள் மானியத்தில் வழங்கி வருகிறோம். ரேஷன் கார்டு, ஆதார் நகல், பட்டாவுடன் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார்.