ADDED : ஜூலை 23, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை சிம்மக்கல் பகுதி டீக்கடைகள் பலவற்றில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துமுருகேச பாண்டியனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து ரேஷன் பறக்கும் படை தாசில்தார் கோபி, வருவாய் ஆய்வாளர் சங்கர் உட்பட அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு டீக்கடைகளில் பயன்படுத்திய 5 காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். அவை காஸ் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
'டீக்கடை, ஓட்டல்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களையே பயன்படுத்த வேண்டும். மாறாக வீட்டு சிலிண்டர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என வருவாய் அதிகாரிகள் எச்சரித்தனர்.