/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நந்தினி நர்சிங் ஹோமில் இன்று பொது, கண் மருத்துவ முகாம்
/
நந்தினி நர்சிங் ஹோமில் இன்று பொது, கண் மருத்துவ முகாம்
நந்தினி நர்சிங் ஹோமில் இன்று பொது, கண் மருத்துவ முகாம்
நந்தினி நர்சிங் ஹோமில் இன்று பொது, கண் மருத்துவ முகாம்
ADDED : நவ 09, 2025 06:06 AM
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் நந்தினி நர்சிங் ஹோமில், வாசன் கண் மருத்துவமனை சார்பில் பொது மருத்துவம், கண் மருத்துவ முகாம் இன்று (நவ., 9) காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. டாக்டர்கள் சங்குமணி, சுஜாதா ஆலோசனை வழங்குகின்றனர். கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, கண் கண்ணாடி பரிசோதனை, மாறு கண், சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிதல், குழந்தைகளுக்கான கண் பரிசோதனை, துார, கிட்டப்பார்வை குறைபாடு, கண்புரை நோய், கண்ணில் தசை வளர்வதை கண்டறிதல் பரிசோதனைகள் வழங்கப்படுகின்றன. அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அனைத்து வகையான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்படும். லேசர் சிகிச்சைக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும்.
முகாமில் சர்க்கரை, கொழுப்பு, தைராய்டு பரிசோதனைகள், டாக்டர்களின் ஆலோசனை ஆகியவை இலவசம். விவரங்களுக்கு 96592 44454ல் தொடர்பு கொள்ளலாம்.