ADDED : நவ 09, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் கோட்ட அளவிலான ஊராட்சி துறை ஓய்வூதியர் சங்கக் கூட்டம் தலைவர் இளங்கோ தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகளை துணைத்தலைவர் தினகரசாமி அறிமுகப்படுத்தினார்.
துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் ராஜேந்திரன் செயல் அறிக்கை, பொருளாளர் சோமசுந்தரம் நிதி அறிக்கை வாசித்தனர். திருமங்கலம் வட்டக்கிளை அனைத்து துறை ஓய்வு ஊழியர் சங்கத் தலைவர் கண்ணன், நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சொக்கலிங்கம், மூர்த்தி, பரமேஸ்வரன் பேசினர்.

